70 ஆண்டுகள் காத்திருந்தோம் என இந்திய பிரதமர் மோடி குறித்து இஸ்ரேல் பிரதமர்

இந்திய பிரதமர் எங்களின் நாட்டிற்கு வருவதற்கு நாங்கள் 70 ஆண்டுகள் காத்திருந்தோம் என இந்திய பிரதமர் மோடி குறித்து இஸ்ரேல் பிரதமர் பெருமிதமாக பேசினார்.
இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் தென்யாஹூ வரவேற்று அங்கு நடந்த நிகழ்ச்சியில் பெஞ்சமின் நெதன்யாஹூ பேசியதாவது:
இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம். இந்திய கலாச்சாரம், வரலாறு, ஜனநாயகம், எங்களுக்கு மிகவும் பிடிக்கும். பிரதமர் மோடி எனது நண்பர், அவரை வரவேற்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். 70 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது.

மிகச்சிறந்த பெரும் மற்றும் நல்ல தலைவர்களில் ஒருவர் மோடி. மேக் இன் இந்தியா என்பதுடன் நாங்கள் , மேக் வித் இந்தியா என இருக்கிறோம். நமது உறவுக்கு வானம் எல்லை இல்லை. இன்னும் நமது உறவுகள் விரிவாக்கம் பெறும். இவ்வாறு பெஞ்சமின் பேசினார்.

Theme images by mammuth. Powered by Blogger.