கத்தார் மீது மேலும் நிபந்தனைகள்
கத்தார் மீது மேலும் நிபந்தனைகள் விதிக்க வளைகுடா நாடுகள் தீர்மானித்துள்ளன.
இதனால் கத்தாருக்கு வரும் திங்கள் கிழமை கருப்புத்திங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வளைகுடா கூட்டுறவு கவுன்சில் நாடுகள் கத்தாருக்கு 13 நிபந்தனைகள் விதித்து அவற்றை நிறைவேற்ற புதன்கிழமை அவரை அவகாசம் அளித்திருந்தன.
இந்நிலையில், கத்தார் நிபந்தனைகள் முழுவதையும் ஏற்கவில்லை.இதனால் கட்டார்க்கு எதிராக மேலும் நிபந்தனைகள் விதிக்கவேண்டும் என்று வளைகுடா நாடுகள் தீர்மானித்துள்ளன.
இதனால் கத்தார் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
1. வளைகுடா நாடுகளில் கத்தார் நிறுவனங்கள் பெற்ற கடன் தொகையை வசூலிப்பதில் தீவிரம் காட்டவேண்டும்.
2. கத்தார் நாணயத்துக்கு மாற்று நாணயம் வழங்க தடைவிதிக்க வேண்டும்.
3. தீவிரவாதத்தை ஒன்றிணைந்து எதிர்க்கும் நாடுகளும் கத்தாருக்கு உதவ தடை ஏற்படுத்த வேண்டும்.
இதுபோன்ற கத்தாருக்கு எதிரான நடவடிக்கைகள் திங்கட் கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.