கதிராமங்கலத்தில் இருந்து போலீசே வெளியேறு.. நெடுவாசலில் பேரணி!
முடியாத வயதிலும் மண்ணை காக்க திரண்ட அன்னையர்கள்...
அரசின் அடக்குமுறையை வேடிக்கை பார்க்கும் இளைஞர்களே நீங்கள் மனித பிறவிகளா ??
கதிராமங்கலத்தில் இருந்து போலீசே வெளியேறு..
நெடுவாசலில் பேரணி!
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஒஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் எடுக்கும் பணியை மக்களின் போராட்டத்தை மீறி செயல்படுத்திய நிலையில் எண்ணெய் குழாய் வெடித்த விபத்தில் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் மீண்டும் பொதுமக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் அங்கு குவிக்கப்பட்ட போலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு தடியடி நடந்தது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மீத்தேன் எதிர்ப்பு இயக்கம் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மேலும் போலிசார் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த கிராம மக்கள் கூட அந்த கிராமத்தில் அச்சத்துடன் உள்ளனர்.
இந்த நிலையில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய் என்ற கோரிக்கையுடன் இரண்டாம் கட்டமாக 82 வது நாளாக தொடர்ந்து நடந்து வரும் போராட்டத்தில் இன்று கதிராமங்கலத்தில் இருந்து ஒஎன்ஜிசியும் போலிசும் வெளியேறு.. மக்கள் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய் என்ற முழக்கத்துடன் மக்கள் போராட்டங்களை மதிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் தொடங்கி கடைவீதி வரை பிரமாண்ட பேரணி நடந்தது.
பேரணியில் நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர். நெடுவாசல் இரண்டாம் கட்ட போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் முதல் கட்ட போராட்டம் போல மாணவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் பல கல்லூரி மாணவர்களும் நெடுவாசல் வர காத்திருப்பதாகவும் அனைத்து கல்லூரி மாணவர்களும் ஒரே நாளில் நெடுவாசலில் சங்கமிக்க வேண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

