பப்பாளி விதையுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதங்கள்

புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்கள் இப்போது தான் அதிகமாக உள்ளன. அந்த காலத்தில் இவையெல்லாம் மிகவும் அரிதான நோய்கள். அதற்குக் காரணம் பண்டைய கால மக்கள் எடுத்துக் கொண்ட இயற்கை மருந்துகள் தான்.
மக்கள் பலர் இப்போது இயற்கை மருத்துவத்தின் அபூர்வ குணங்களை அறிந்து அவற்றை உபயோகிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கே பப்பாளி விதையுடன் தேன் கலந்து சாப்பிடுவதினால் நமது உடலினுள் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
2 டீஸ்பூன் பப்பாளி விதையுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனை குறைந்தது ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். அப்போது தான் நிஜமான பலன்கள் விரைவில் கிடைக்கும்.


1. பப்பாளி விதை மற்றும் தேனில் உள்ள சக்தி வாய்ந்த அமிலங்கள் மற்றும் ஆன்டிஆன்ஸிடன்ட்கள் வயிற்றில் உள்ள நச்சுக்களை வெயியேற்றி உடலை முழுமையாக சுத்தம் செய்கிறது.
2. வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பதற்கு இது ஒரு சிறந்த இயற்கை முறையாகும். வயிற்றில் உள்ள புழுக்கள் நமது செரிமான செயலை பாதிக்கிறது. பப்பாளி மற்றும் தேனில் உள்ள அமிலங்கள் புழுக்களை கொன்று செரிமானத்தை சீர் செய்கிறது.
3. பப்பாளி விதை, தேன் கலந்த கலவையில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது.
4. இந்தக் கலவையில் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது. எனவே, அதனை தொடர்ந்த சாப்பிட்டு வந்தால் நமது உடலின் சதைகளை ஒழுங்கு செய்து அழகான கட்டுக்கோப்பான உடலை பெற உதவுகிறது.
5. தேன் மற்றும் பப்பாளி விதை கலந்த கலவையில் குளுக்கோஸ் அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள சோர்வுடன் போராடி உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகின்றது.
6. இந்த இயற்கை மருத்துவக் கலவையில் சக்தி வாய்ந்த ஆன்டிஆன்ஸிடன்ட்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் காய்ச்சல் மற்றும் நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுத்து உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.
7. பப்பாளி விதை மற்றும் தேன் கலந்த கலவையில் சில வகை எம்சைம்கள் உள்ளன. அவை ஆண்களின் விந்து எணணிக்கையை அதிகரித்து ஆண்மைக் குறைவு பிரச்சனை ஏற்டாமல் தடுக்கிறது

Theme images by mammuth. Powered by Blogger.