கடமைக்காக உயிர்துறந்த இளஞ்செழியன் மெய்ப்பாதுகாவலர் : மக்கள் சார்பில் தமிழ் யாழ் இணையத்தின் வீர வணக்கங்கள்
கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் மெய்ப்பாதுகாவலர் பொலிஸ் சார்ஜன் ஹேமச்சந்திர அவர்கள் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நீதித்துறைக்கும் போலீசாருக்கும் விடுக்கப்பட்ட ஓர் பெரும் சவால். யாழ் மண்ணில் இவ்வாறான சம்பவங்கள் ரவுடித்தனங்கள் பல இடங்களில் சகாயமாய் இடம்பெறும்போது எச்சரித்த நீதி துறைசார் போலீசார் அனைவரும் இனி அவ்வாறான வான் செயல்களை துளியளவேனும் அனுமதிக்க வாய்ப்பில்லை. நீதிசார் நடவடிக்கைகளை இனியும் போலீசார் பிற்போடப்போவதில்லை. இதுவே மக்களின் எதிர்பார்ப்பும் கூட . சிறிய அளவில் அனுமதிக்கப்படும் வன்செயல்களே இவ்வாறான விளைவுகளை ஏற்படுத்துகின்றது
சார்ஜன் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் கடமைக்காக உயிர்துறந்த போலீசாருக்கு வீர வணக்கத்தையும் மக்கள் சார்பில் தமிழ் யாழ் இணையம் தெரிவித்துக்கொள்கிறது

No comments