மலேசியாவில் ஒப்பரேஸி (Operasi) - அனைவரும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

முக்கிய அறிவித்தல்
தற்போது மலேசியாவில் ஒப்பரேஸி (Operasi) நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அனைவரும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
1. கறுப்பு கலர் ஜீன்ஸ்/ கறுப்பு நிற ஷீ அணிந்து செல்வதை முடிந்தவரை *தவிர்க்கவும்.*
2. இரவு நேரங்களில் வெளியில் செல்வதைக் இயலுமானவரை குறைக்கவும்.
3. உங்களுடைய UN இலக்கம் மற்றும் அமைப்பு இலக்கத்தை உங்களுடைய நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ கொடுத்து வைத்திருக்கவும்.
4. கைது செய்யப்பட்டால் கைது செய்யப்பட்ட இடம்/ நேரம்/ UN இலக்கம்/ தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் போன்ற அத்தியாவசிய தகவல்களை *உடனடியாக அமைப்புக்குத் தெரியப்படுத்தவும்.*
5. நியமன அட்டையில் இருப்பவர்களும் ஆவணம் எதுவும் இல்லாதவர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
6. நியமன அட்டையில் இருப்பவர்களும் ஆவணம் எதுவும் இல்லாதவர்களும் கைது செய்யப்பட்டால், *UN பாதுகாப்பின் கீழ் இருப்பதாகவே அதிகாரிகளிடம் கூறவும்.*
7. கைத்தொலைபேசியில் அமைப்பின் தொடர்பு இலக்கத்தை சேமித்துவைக்கவும்.
8. UNHCR பொலிஸ் கைது அவசர தொடர்பு இலக்கம் *012 630 5060*
9. வேலை செய்யும் இடங்களில் சீருடை அணிந்து வேலை செய்ய வேண்டாம்.
10. UN அட்டையுடன் வாகனம் ஓட்ட வேண்டாம்/ தொலைதூரப் பயணங்களை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளவும்.
உங்களது பாதுகாப்பு எங்களுக்கு மிகமுக்கியம். தயவு செய்து உங்களது இடங்களில் ஒப்பரேஸி நடைபெற்றால் அத்தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளவும்.


*மலேசிய வாழ் இலங்கைத் தமிழ் அகதிகள் அமைப்பு*

Theme images by mammuth. Powered by Blogger.