மயிலிட்டி 54 ஏக்கர் காணி விடுவிப்பு 27 வருடங்களின் பின் இன்று விடுவிப்பு. - சிறப்புப் பார்வை 03.07.2017

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த மயிலிட்டி துறைமுகம் அதனை அண்டிய 54 ஏக்கர் நிலப்பரப்பு சற்று முன்னர் விடுவிப்பு. மக்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அருகில் காணி கையளிப்பு நிகழ்வு நடக்கும் இடத்திற்கு இராணுவ பஸ்கள் மூலம் ஏற்றிவரப்பட்டுள்ளனர்.



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நல்லிணக்க சிந்தனையில் வலிகாமம் வடக்கு மக்களின் கனவு மயிலிட்டி துறைமுகம் அதனுடன் இணைந்த 54 ஏக்கர் காணி விடுவிப்பு 27 வருடங்களின் பின்னர் விடுவிப்பு.






மயிலிட்டி துறைமுகம் அதனை அண்டிய 54ஏக்கர் நிலப்பரப்பு பத்திரம் யாழ்ப்பாணம் இராணுவ கட்டளை தளபதி ஹெட்டியாராச்சியால் யாழ்ப்பாண அரச அதிபர் என்.வேதநாயகம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட போது...



மயிலிட்டி அம்மன் கோயிலும் அதனுடன் இணைந்த முருகன் கோயிலும். 27 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் மக்கள் பார்வையிட்டதுடன் கர்ப்பூரம் கொளுத்தி வணங்கினர். ஆலயத்தின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன் தேர் உக்கி சேதமடைந்துள்ளது.








மயிலிட்டி சந்தியில் தற்போது பாதுகாப்பு வலய எல்லை நிறுவப்பட்டுள்ளது. இந்த வீதியுடன் கட்டுவன் மயிலிட்டி வீதி இணைந்துள்ளது அடுத்த கட்டமாக இரண்டு மாதங்களுக்கு பின்னர் ஏனைய காணிகள் விடுவிக்கப்படவுள்ளது


Theme images by mammuth. Powered by Blogger.