15 வயதுடைய முஸ்லிம் சிறுவன் கழுத்து நெரித்து கொலை - புத்தளம்

புத்தளம் சமீரகம என்னும் பகுதியிலுள்ள மைய்யித்துபிட்டி பள்ளிவாசல் அருகாமையிலுள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சுமார் 15 வயதுடைய முஸ்லிம் சிறுவனின் உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது!

கொலையாளி நாகவில்லை சேர்ந்த (முஸ்லிம்) நபர் எனவும், குறித்த நபர் பொதுமக்களால் அடித்து பிடிக்கப்பட்டு முந்தல் பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட பின் வைத்தியாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த சிறுவன் சமீரகமயை சேர்ந்த நஸார் என்பவரின் மகன் என தெரியவருகிறது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இப்படுகொலைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை, பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.