நாசாவில் நான் ஒரு விஞ்ஞானியாக இருக்க ஆசைப்படுகிறேன் இலங்கைச் சிறுவன் புஷ்பராஜ் விஷ்ணுதர்சன்
நாசாவில் நான் ஒரு விஞ்ஞானியாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று முயற்சியை முன்னெடுத்துச் செல்லுகின்றார் சூரிய சக்தி மூலம் இயங்கும் புதிய வகை முச்சக்கர வண்டியை கண்டுபிடித்து இயக்க வைத்திருக்கும் புஷ்பராஜ் விஷ்ணுதர்சன்.
கண்டி வத்துகாமம் பிரதேசத்தில் மடுல்கலை என்ற இடத்தில் அமைந்துள்ள ரோட்டுக்கடை பகுதியில் வசிக்கும் புஷ்பராஜ் பிரபாஹரி ஆகியோரின் மகனான பாரதி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்கும் இவர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய முச்சக்கர வண்டியை புத்தாக்குனர் போட்டிக்காக தயார் செய்து பிரதான வீதியில் வத்துகாமம் வலயக் கல்விப் பணிமனைக்கு செலுத்திச் சென்று சாதனை படைத்துள்ளார்.சூரிய சக்தி மூலம் ஒன்றரை மணித்தியாலத்தில் சோறு சமைக்கக் கூடிய அவன் ஒன்றையும் மனித சக்தி மூலம் இயங்கும் புதிய சலவை இயந்திரம் ஒன்றையும் வலது குறைந்தவர்களுக்கான சூரிய சக்தி சக்கர வண்டி மின்சார துடைப்பம் போன்ற மகத்தான படைப்புகளை ஏற்கனவே தனது மூத்த சகோதரனுடன் சேர்ந்து கண்டு பிடித்துள்ளார்.
கற்றலில் அதிக ஆர்வம் காட்டாத இம்மாணவன் கணிதம் விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் அதிக புள்ளிகளை பெறுவதோடு தமிழ் ஆங்கிலம் சமய பாடங்கள் கசப்பாக இருப்பதாக சொல்கிறார் தனது அண்ணன் கிருஷ்ணதர்சன் 2015 ஆம் ஆண்டு புத்தாக்குனர் போட்டிகளில் கலந்து கொள்ள சென்றபோதே தொழில் நுட்பத்தில் ஆர்வம் ஏற்பட்டது.புத்தாக்குனர் போட்டிகளில் பல ஆக்கங்களைக் கண்டு அவற்றில் ஈர்க்கப்பட்டதே என் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது என்கிறார்.பல முறை முயற்சி செய்து தவறிய இப்பணியில் பாதி வெற்றியை மட்டுமே பெற்றுள்ளேன் இன்னும் மீதிப் பணியிருப்பதாகக் கூறும் விஷ்ணுதர்சன் ஒரு முறை செய்து தவறிய பின் மாற்று இயந்திரம் மற்றும் பாகங்களை கொள்வனவு செய்ய முடியாமல் இருக்கிறது எனது அப்பா தன்னால் இயன்ற அளவு கேட்கும் பொருட்களை வாங்கித் தருவதாக கூறுகிறார்.இந்த முச்சக்கர வண்டியை செலுத்திப் பார்க்கும் போது மேலும் அதை மேம்படுத்த சேக்கிட்களும் ஏனைய உதிரிப் பாகங்களும் தேவைப்படுவதாகக் கூறுகிறார்.அபிராமி தமிழ் வித்தியாசத்தில் ஆரம்பக் கல்வியை கற்ற இவர் தரம் 4 இல் பாரதி தமிழ் வித்தியாலயத்திற்கு சென்றபோது எழுத வாசிக்க தனக்கு கற்பித்த ஆசிரியை புஸ்பராணிதான் என் வாழ்க்கையில் கல்விக்கண்ணை திறந்தவர் என்று சொல்லி பெருமை கொள்கிறார்.ஆசிரியை பிரமிளா மற்றும் அதிபர் ஆசிரியர்களை வழிகாட்டியமைக்காக நன்றி முகத்தோடு நோக்குகிறார்.
தைரியமாக பேசும் விஷ்ணுதர்சனின் முகத்தில் நம்பிக்கை ஒளி தென்படுகிறது. 134000 பேர் கலந்து கொண்ட தேசிய மட்டத்திலான புத்தாக்குனர் போட்டி தாமரை தடாகத்தில். 2016ஆம்ஆண்டு நடைபெற்றபோது இவரது கண்டுபிடிப்பான அங்கவீனர்களுக்கான சூரிய சக்தி வண்டி 3ஆம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சில்லறை கடை ஒன்றில் வேலை செய்து வரும் இவரது தந்தையும் வீட்டுப்பணிப்பெண்ணான தாயும் பிள்ளைகளின் முயற்சிக்கு பெரும் உந்து சக்தியாக விளங்கிவருகின்றனர்.
விஷ்ணுதர்சனின் படைப்பு நம்மவர்களால் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை என்ற ஆதங்கம் இவரது பெற்றோர்களுக்கு இருப்பதை அவர்களுடன் பேசிய போது உணர முடிந்தது.ஏனைய மாணவர்களைப்போலவே விளையாட்டு பொழுதுபோக்கு என்று காலத்தை கடத்தும் தமது பிள்ளைகள் படிக்கும் முறை சற்று வித்தியாசமாக இருப்பதாக கூறுகிறார் அவர்களின் தந்தையான புஷ்பராஜ் அதிகாலையிலேயே எழுந்து படிக்க ஆரம்பிக்கிறார்களாம்.
வீட்டில் கருவிகளை அடித்து உடைத்துக்கொண்டிருக்கும் விஷ்ணுதர்சனின் செயலை தாம் கண்டிப்பதில்லை என்று பெற்றோர் கருத்து தெரிவித்தார்கள்.மலையக பாடசாலைகளில் ஆங்கில பாட ஆசிரியர்களை அதிகம் நியமித்து ஆங்கில கல்வியை பெற்றுதாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அவர். மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் இவரைப் பாராட்டியுள்ளதோடு கொழும்பு வாழ் தமிழ் வர்த்தகரிருவரின் உதவிகள் சிலவும் இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.மலையக கல்வி மேம்பாட்டிற்காக சிரத்தை காட்டுபவர்கள் விஷ்ணுதர்சனை ஊக்கப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வது சாலச் சிறந்ததாக அமையும் மேலதிக தொடர்புகளுக்கு என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.0725828193

No comments