சட்டவிரோத மணல் அகழ்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!
மட்டக்களப்பு - ஏறாவூர்பற்று, வேப்பவெட்டுவான் காரைக்காடு கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து வேப்பவெட்டுவான் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
புத்தம்புரி, மாவடிஓடை, பாலமடு, காரைக்காடு ஆகிய இடங்களில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் அகலப்பட்டு வெளியிடங்களுக்கு செல்லப்படுகின்றதிற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பகுதியில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல் அகழ்வதினால் குறித்த பகுதியிலுள்ள வீதிகள் பாதிக்கப்படுவதாகவும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன்மூலம் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும், மணல் அகழ்வுக்கு வெளியிடங்களில் உள்ளவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதாகவும் தங்கள் பிரதேசங்களிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற சங்கங்களுக்கு வழங்கப்படுவதில்லை போன்ற விடயங்களைத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த இடத்தில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மணல் ஏற்றுவதற்கு வருகைதந்த வாகனங்களை மறித்ததுடன் ஆர்ப்பாட்டம் முடிவடைந்து ஆர்ப்பாட்டம் கலைந்து செல்லும்மட்டும் வாகனங்களைச் செல்லவிடாது தடுத்து நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments