மண்டை தீவில் படகு கவிழ்ந்து ஆறு மாணவர்கள் பலி

மண்டைத்தீவு கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 05 இளைஞசர்கள் கடலில் முழ்கி மரணம் இன்று மதியம் 01.30 பிற்பகல் இடம்பெற்றது. குறித்த சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் உரிய பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பொறுப்பேற்குமாறு பணிப்புரை..
18 முதல் 20 வயதுக்கிடைப்பட்ட றஜீவ், பிரவீன், தனுரதன், தனுசன் மற்றும் செல்வின் ஆகியோர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.


குளிக்க சென்று இருக்க கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது மேலதிக விசாரணைகள் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.

நல்லூர், கொக்குவில் மற்றும் உரும்பிராய் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
பண்ணை, மண்டதீவு கடற் பகுதியில் சற்றுமுன்னர் நடந்த படகு விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரைத்  தேடும் பணி நடைபெறுகின்றது. உயிரழிந்தவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மண்டை தீவுக்கு அருகில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகில் சென்ற சமயமே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த படகு ஒன்றை எடுத்து கடலுக்குச் சென்றபோதே இந்த இடர் நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது.
படகில் ஏழு பேர் பயணித்துள்ளனர். அவர்களில் ஐவர் நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ளனர். ஒருவரைக் காணவில்லை. ஒருவர் நீந்திக் கரை சேர்ந்துள்ளார்.
நீந்திக் கரை சேர்ந்தவர் தற்போது பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
யாழ் தொழில் நுட்பக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட 16மாணவர்கள் நண்பரின் பிறந்த நாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்று படகொன்றில் சவாரியில் ஈடுபட்டபோது படகு கவிழ்ந்ததில் பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மண்டைதீவு படகு விபத்தில் பலியாகிய 6 மாணவர்களின் பெயர் விபரம்.

எஸ்.நாகசுலோசன் (17 வயது) உரும்பிராய்,
எல்.ரஜீவ் (18 வயது) உரும்பிராய்,
ஜே.தினேஸ் (17 வயது) உரும்பிராய்,
ரீ.தனுரதன் (20 வயது) கொக்குவில்,
கே.பிரவீன் (20 வயது) நல்லூர்,
தனுசன் (18 வயது) சண்டிலிப்பாய்.
நண்பர் ஒருவரின் பிறந்தநாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்று அங்கிருந்த படகு ஒன்றை தாமாக எடுத்து சென்றபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.