தருமபுரி பாணியில் தொடர்ந்து தலித் கிராமங்கள் தாக்கப்படுகின்றன...

காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு மாதத்திற்குள் இரு தலித் குடியிருப்புகள் தாக்கப்பட்டுள்ளன.
இரண்டும் தருமபுரிப் பாணி தாக்குதல்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

சென்ற ஜூலை இறுதியில் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்டத் தாக்குதலில் செய்யாறுக்கு அருகில் உள்ள சபுலியுரம்பாக்கம் கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட தலித் வீடுகள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டதோடு சாலையில் வந்துகொண்டிருந்த ஒரு தலித் இளைஞர் தக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அங்கிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் உள்ள செம்புலிமேடு எனும் கிராமத்திலிருந்து வந்த ஆதிக்க சாதியினர் மின்சாரத்தை எல்லாம் நிறுத்தி விட்டு இந்தத் தாக்குதலைச் செய்ததாகச் சொல்லப்படுகிரது.

இரண்டுநாள் முன்னர் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நத்தம் கூட்டு ரோடுக்கு அருகில் உள்ள நல்லூர் எனும் குடியிருப்பு தாக்கப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணுபுரத்துக்கு அருகில் உள்ள ஆமைப்பாக்கம் எனும் ஊரிலிருந்து வந்து ஆதிக்க சாதியினர் இந்தத் தாக்குதலைச் செய்துள்ளனர். 15 வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. எட்டு தலித்கள் இன்னும் மருத்துவமனையில்...

தருமபுரி தாக்குதலில் அரசியல் பலனை அடைந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதே 'ஃபார்முலா' வைக் கையாள்வது என்கிற முடிவுகளுடன் இந்த ட்ய்ஹ் தாக்குதல்கள் நிகழ்வதாகத் தெரிகிறது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.