யாழில் ரயில் சில்லில் சிக்குண்டு பிரபல தமிழ் ஆசிரியர் மீராவின் கணவர் உயிரிழப்பு!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலிலிருந்து தவறி விழுந்து 53 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளாரென யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், புங்கன்குளம் ரயில் நிலையத்தில் இன்று (31) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவத்தில், ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் என்பவரே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் மனைவி, தமிழ் பாட பிரபல ஆசிரியர் மீரா என்பது குறிப்பிடத்தக்கது.
சடலம், யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

No comments