பகிருங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி இணைய சேவை , வாகன வரி குறைப்பு
இணைய சேவை தொடர்பில் வசூலிக்கப்பட்டு வந்த 10 சதவீத தொலைதொடர்பு வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இதனை நிதியமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இந்த வரி நீக்கம் செப்டம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்.
இதேவேளை, சிறிய ரக லொறி மற்றும் சிறிய ரக கெப் ரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த உற்பத்தி வரி 3 இலட்சம் ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 10 இலட்சம் ரூபாயாக காணப்பட்ட வரி 7 இலட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 150 சிசிக்கும் குறைந்த இயந்திர வலுகொண்ட உந்துருளிகளுக்கான வரி 90சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
உந்துருளி வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments