முன்னாள் போராளிகள் வன்முறையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது : சி.வி.விக்னேஸ்வரன்

முன்னாள் போராளிகள் உண்மையாகவே வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது , தெற்கில் இராணுவத்தில் இருந்து ஓடியவர்கள் பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டார்கள் இராணுவம் என்பதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றில்லை அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக யாழில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களில் முன்னாள் போராளிகள் தொடர்புபட்டுள்ளனர் என பரவியிருக்கும் கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
அரசாங்கம் முன்னால் போராளிகள் சிலரை வெறும் சந்தேகத்தின் நிமித்தம் கைது செய்வது என்பது உண்மை எனினும் சந்தேகத்தின் பேரில் முன்னால் போராளிகளை கைது செய்வது பிழை எனினும் வன்முறைகள் சில தற்பொழுது நடந்துகொண்டிருக்கின்றன. முன்னாள் போராளி என்ற முறையில் மதுபோதையில் பொலிஸாரை சுட்டிருந்தால் அதை நாங்கள் சரி என்று சொல்லமுடியாது பிழை செய்திருந்தால் அதற்குரிய தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.
முன்னாள் போராளிகளை பிழையான வழிகளில் கைது செய்யப்படிருந்தால் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உண்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யார் என்று அறியப்படவேண்டும் முன்னாள் போராளிகளாக இருந்து அவர்கள் குற்றங்கள் இழைப்பார்கள் என்றால் நாங்கள் அவர்களை வித்தியாசமாக பார்க்கமுடியாது.முன்னாள் போராளி என்ற ரீதியில் காரணமின்றி கைது இடம்பெற்றால் அதை நாங்கள் நிறுத்தவேண்டும் அது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.