லண்டனில் மீண்டும் பாரிய தீ விபத்து; புகை மண்டலமாக காட்சியளிக்கும் அடுக்குமாடி கட்டடங்கள்
லண்டனில் மீண்டும் பாரிய தீ விபத்து; புகை மண்டலமாக காட்சியளிக்கும் அடுக்குமாடி கட்டடங்கள்
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் ஆச்தூண்தீச்tஞுணூ பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்றைய தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6.50 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளதால், அங்கு 60 க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் போராடி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் லண்டனில் ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தம் காரணமாக நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments