SAVE மியன்மார் : மனிதத்தை காக்கும் நாடுகள் உதவ முன்வர வேண்டும்.

மியன்மார் நாட்டில் இடம்பெறுவது இனப்படுகொலை அல்ல குறித்த ஒருசில மனிதர்களின் தேவைக்காக அவர்களின் தூண்டுதலில் மக்கள் கொலைசெய்யப்படுகின்றனர்.

இது ஒட்டுமொத்த மனித இனமே எதிர்த்து குரல்கொடுக்கவேண்டிய ஓர் அவலம் ஆனால் எந்த ஒரு சமூகமும் இதுவரையில் இதற்கு எதிராக எந்த ஒரு செயற்பாடுகளையும் மீட்ப்பு பணிகளையும் மேற்கொள்ளாத நிலை உண்மையில் கவலைக்கிடம்.
அங்கு இடம்பெறும் மனிதநேயமற்ற கொலைகள் பலரால் இனப் படுகொலையாக பார்க்கப்பட்டு இன்னமும் பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு இன்னமும் இனப் பிரிவினைவாதம் தூண்டப்படும் நிலையே தற்போது காணப்படுகின்றது. இதன் பின்னணியில் யார் ? எவர் ? எதற்காக இந்த அவல கொலைகள் என்றே  தெரியாமல் ஒட்டுமொத்த மியன்மார் மக்களும் சிசுக்களும்  சிதைக்கப்பட்டு வதைக்கப்பட்டு கொலைசெய்யப்படுகின்றனர்.
இதனை எதிர்த்து குரல்கொடுப்போம் 
மனிதத்தை காக்கும் மனம்படைத்த நாடுகள் உதவ முன்வர வேண்டும்.
அதுவரையில் இதனை இனப்படுகொலையாக பார்த்து மக்களும் தமக்குள் இனப் பிரிவினை வாதத்தை வளர்க்காமல் இருப்போம்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.