பிரிடன் போத்தலில் பக்குவப்படுத்திய மருந்தினால் பறிபோனது 4 வயது சிறுமியின் உயிர்

தாயின் வயிற்றை தடவி விளையாட தங்கச்சி வேண்டுமென்று கூறிய நான்கு வயது சிறுமியின் மரணம் திருகோணமலை மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட கட்டைப்பறிச்சான் கிராமத்தில் சிவகாந்தனுக்கு தலைப்பிள்ளையாக பிறந்த நான்கு வயதுடைய 
பிறெஸ்மி தடிமல் காரணமாக பெற்றதாயிடம் தமது நோயை போக்க பிரிடன் எனும் மருந்தை குடித்தாள்.
அந்த நான்கு வயது சிறுமியின் விதியை மாற்றியது பிரிடன் பாணி ! அம்மருந்தை தந்தை சிவகாந்தனும் குடித்துப்பார்த்தான்.
அப்போது தந்தைக்கு மாற்றம் தென்பட்ட போது உடனடியாக மூதூர் தள வைத்தியசாலைக்கு வேகமாக கொண்டு சென்றார்கள்.
இதேநேரம் சிறுமியும் மயங்கி விட்டது -தந்தைக்கும் மயக்க நிலை வருவதை அவதானித்த வைத்தியர் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பில் வைத்தியர்கள் இரவோடு இரவாக கண்விழித்து சிகிச்சை அழித்தும் சிறுமியின் நேரம் மர்ம கனவாக மாறியது.
கிருஷ்ண வேணிக்கு தலைப் பெண்பிள்ளையாக பிறந்த இந்த சிறுமிக்காக வேண்டி தாயார் மீண்டும் பிள்ளையொன்றினை பெற்றெடுக்க ஆரம்பித்தாள்.
சிறுமி தன்னுடன் விளையாட தனக்கு அவசரமாக தங்கையையோ அல்லது தம்பியையோ பெற்றுத்தாருங்கள் என நாளுக்கு நாள் சொல்லிச்சொல்லி அம்மாவின் வயிற்றை தடவிய சம்பவத்தை நேரில் காண்பதாகவும் தனக்கு இச்சிறுமியின் மரணத்தை நினைக்கவே முடியாது என பக்கத்து வீட்டு கதறியழுததை நினைக்கும் போது இச்சிறுமியின் பாசம் என் மனதை உருக்கியது.
பிள்ளை பாசத்திற்காக தடிமல் எனக்கூறிய தன் பிள்ளைக்கு தாயாரான கிருஸ்ண வேணி பிரிடன் பாணி கொடுத்தது பிள்ளையை சாவடிப்பதற்காகயா? இல்லையே இல்லை!
வீடுகளில் மருந்துகளை வைக்கும் போது நஞ்சு என தெரிந்த மருந்துகளை வைக்காமல் இருப்பது இச்சிறுமியின் மரணத்தின் மூலம் விளங்கப்டுத்துகின்றது.
கால் கடுப்புக்காகவும்- நோவுக்காகவும் வழங்கப்பட்ட இந்த மருந்தினை தாய் பிரிடன் போத்தலில் பக்குவப்படுத்தி வைத்திருந்த நேரம் தடிமலுக்காக வழங்கப்பட்ட பிரிடன் பாணியின் போத்தலும் அதே நிறமாக தென்பட்டுள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பெற்றோர்களும் வீடுகளில் களஞ்சியப்படுத்தி வைக்கும் மருந்துகளை வழங்குவதை நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.