இலங்கை மீனவருக்கு கிடைத்த அதிஷ்டம் : திமிங்கலத்தின் வாந்தி இத்தனை கோடியா ?????
இலங்கையின் கடற்பரப்பில் விலை மதிக்க முடியாத பொருள் ஒன்று சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கற்பிட்டி மீனவர்கள் சிலருக்கு எதிர்பாராத விதமாக கடலில் இருந்து அதிஷ்டம் ஒன்று கிடைத்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு ஒழுங்கான முறையில் மீன் கிடைக்காமையினால் வருத்தத்துடன் கரைக்கு திரும்பியுள்ளனர்.
அவ்வாறு கரைக்கு திரும்பும் போது கடுமையான துர்நாற்றத்துடன் கடலில் மிதந்து வந்த பொருள் ஒன்றை இந்த மீனவர்கள் அவதானித்துள்ளனர்.
அதற்கு அருகில் சென்று பார்க்கும் போது அது "எம்பர்" (Ember) எனப்படும் திமிங்கலத்தின் வாந்தியாகும்.
அது பல கோடி பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றது. எம்பர் ஒரு கிலோகிராம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியானதென குறிப்பிடப்படுகின்றது.
இந்த திமிங்கிலத்தின் வாந்தியை வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்கு உட்பட பயன்படுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.
விலை மதிப்பில்லாத பொக்கிஷம் கிடைத்தமையால் அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments