உதயன் நாளிதழிடம் 50 கோடி ரூபா இழப்பீடு கோரி மானநஷ்ட வழக்கு



வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன்யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளிதழிடம் 50கோடி ரூபா இழப்பீடு கோரி மானநஷ்ட வழக்குத் தொடுத்துள்ளார். தற்போது விவசாய அமைச்சராக இருக்கும் சிவனேசன் போதைவஸ்து கடத்தலுடனும் , தராக்கிசிவராம் படுகொலையுடன் தொடர்புபட்டவர் என்றும், உதயன் செய்தி வெளியிட்டிருந்தது. 

வடக்கு விவசாய அமைச்சர் இக்காரணங்களைக் குறிப்பிட்டு இவ்விவகாரங்களில் தன்னைக் குறிப்பிட்டு திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக, சட்டத்தரணியூடாக கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார். 

அத்துடன் 30 நாட்களுக்குள் 50கோடி ரூபா பணத்தினைச் செலுத்தாவிட்டால் நீதிமன்றத்தினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.