சாதனை படைத்ததாய் கொண்டாடிய மெர்சலுக்கு வைத்த ஆப்பு :மெர்சலுக்குத் தடை : விஜய் ரசிகர் ஆழ்ந்த சோகத்தில்

தளபதி விஜய்யின் மெர்சல் படம் வெளிவர இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், படத்திற்கு புதிய சிக்கல் வெடித்துள்ளது. 'மெர்சல்' டைட்டில் பயன்படுத்த 'மெர்சலாயிட்டேன்' என்ற படத்தின் தயாரிப்பாளர் தடை வாங்கியுள்ளார். அதனால் படத்தின் டைட்டில் மாறுமா அல்லது பிரச்சனை தீர்க்கப்படுமா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். 
இந்நிலையில் விஜையின் பிஆர்ஓ ரியாஸ் அளித்துள்ள பேட்டியில் "ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஆண்டவன் மீது நம்பிக்கை உள்ளது. நிச்சயம் மெர்சல் படம் வெளியாகும். தீபாவளி கொண்டாட்டம் உறுதி" என கூறியுள்ளார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.