எச்சரிக்கை : காலநிலை மாற்றத்திற்கு அல்ல டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு ...!


மழைக்காலம் ஆரம்பித்ததோ / மழை பெய்து நிலம் நனைத்துவிட்டது என்றாலே அடுத்தநாள் நீங்கள் டெங்கு ஒழிப்பு சுகாதார பிரிவினரை உங்கள் வீடுகளில்  நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஆகவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியம். 
வீடுகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே எச்சரிக்கையுடன் இருங்கள். பொது இடங்களில் இது சம்பந்தமான நடவடிக்கைகள் குறித்து யாரும் எதுவும் பேசக்கூடாது.
மாநகர சபைக்கு சொந்தமான பல இடங்கள் கழிவுநீர் கால்வாய்கள் அரசிற்கு சொந்தமான பல இடங்கள் இவற்றில் எல்லாம் ........................ இதற்கு தகுந்த உதாரணம் யாழ் போதனா வைத்தியசாலையை அண்மித்த கழிவு நீர் கால்வாய்களை சற்று எட்டிப் பார்த்தாலே போதும் 
ஆனால் அது அரசு உடமை ஆகவே அது குறித்து நாம் பேசுவது தவறு. இருப்பினும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.
ஆகவே உங்கள் வீடுகளில் ஒரு துளி நீர் தேங்கி நிற்பதை கூட அனுமதிக்காதீர்கள். 
அதிகாரிகளது பார்வை மிகவும் கூர்மையானது.
 இதனையெல்லாம் சற்று மனதில் கொண்டு எச்சரிக்கையாக இருங்கள் 
வீடுகளை சற்று அவதானமாக கண்காணித்துக்கொள்ளுங்கள். அரசிற்கும் வரி செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் எண்ணம் இருந்தால் அது உங்கள் பெருந்தன்மை
ஏன் என்றால் காசு கொடுத்தால் அல்லது வீட்டு உரிமையாளரை சிறையில் அடைத்தால் நுளம்புகள் அங்க தாங்காதாம் .. டெங்கு வராதாம் 
எங்களை விட எங்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் அவர்கள் 
ஆனால் இப்படியே போனால்  
வீடுகளில் மழைநீர் சேகரிப்பது எப்படி ?

No comments

Theme images by mammuth. Powered by Blogger.