இரு தினங்கள் இடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம்
காலநிலை மாற்றத்தால் இரு தினங்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு
இலங்கையில் அடுத்துவரும் இரு தினங்கள் காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதால் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் இலங்கையின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு ஏற்படும் எனவும் பல பகுதிகளில்இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடமேல் மற்றும் வடமத்திய மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேசங்களில் 75 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக கடும் காற்றும் வீசக்கூடும். அத்துடன் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments