தொப்புள் கொடியை ஏன் உடனே வெட்டக்கூடாது... ?



♥சில நாடுகளில் இன்றும் பல தாய்மார்கள் , இயற்கை முறையில் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க, பண்டைய பிரசவ முறையையே விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர் .

♥ஒரு ஆய்வின் படி ஈரானில் அதிகமான தாய்மார்கள் இயற்கைபிரசவ முறையை தேர்ந்தெடுத்ததால் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்று உறுதிப் 
படுத்தப்பட்டுள்ளது .

♥தொப்புள்கொடி என்பது குழந்தையையும் , அதற்கு தேவையான ஆக்சிசன் மற்றும் சத்துக்களை  வழங்கும் நஞ்சுக்கொடியையும் (கருப்பை சுவர் பகுதி )இணைக்கும் ஒரு கொடியாகும் .

♥தொப்புள் கொடி நாம் வெட்டாமல் விட்டால் என்ன ஆகும்? எதுவும் ஆகாது அது தானாகவே குழந்தை பிறந்த நாளில் இருந்து மூன்று முதல் பத்து நாட்களில் தானாக உதிர்ந்துவிடும் தன்மையுடையது

♥உலகின் புத்திசாலிகள் ஜப்பானியர் என்பார்கள்... காரணம் இன்றும் ஜப்பானில் பல இடங்களில் குழந்தையின் தொப்புள்கொடி தானாக உதிரும்வரை வைத்திருப்பார்கள்.. (படம் )

♥தொப்புள் கொடியை தாமதித்து  வெட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.. அதில் முக்கியமானது என்ன?

♥2014, ஆம் ஆண்டில் உலகசுகாதார அமைப்பு ,ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ஒரு சில நிமிடம் 
தொப்புள் கொடியை தாமதித்து வெட்டுவதால் குழந்தை மற்றும் தாயின் ஊட்டச்சத்தை மேம்படுத்த முடியும் என்று உறுதிப்படுத்தியுள்ளது .

♥குழந்தை பிறந்தபின் அதன் தொப்புள் கொடியை ஓரிரு நிமிடம் தாமதித்து வெட்டும் போது நஞ்சுக்கொடியில் இருக்கும் இரத்தஅனுக்கள் குழந்தைக்கு அதிகமாக கிடைக்கும் .

♥பிறந்த சில வினாடிகளுக்குள் தொப்புள் கொடி வெட்டப்பட்ட குழந்தைகளைக் காட்டிலும் , தாமதித்து வெட்டப்பட்ட குழந்தைக்கு மூன்று மடங்கு அதிகமான அளவு இரத்தத்தைப்  பெறுகிறது , 

♥குழந்தையின் மூளை மற்றும் நுரையிரலுக்கு நிறைய இரத்தம் கிடைப்பதால் ஆக்சிசன் பரிமாற்றம் சிறப்பாக இருக்கும் , அத்தோடு சிவப்பு செல்கள் , தண்டு செல்கள் , இரும்புச்சத்து மற்றும் ஏராளம் பிறசத்துகளும் கிடைக்கும்.

♥பிற குழந்தைகளை விட இவர்கள் பொதுவான சமூகம் மற்றும் மோட்டார் திறமைகளில் சிறந்து விளங்குகின்றனர் 

♥ஓரிரு நிமிடம் தொப்புள் கொடியை தாமதித்து வெட்டுவது , ஒரு குழந்தையின் ஆரோக்கியமான , நோயற்ற வாழ்விற்கு அடித்தளமாகிறது .

♥எனவே உங்கள் பிரசவத்தின் போது நீங்கள் ஒரு நிமிடமாவது வைத்திருந்து தொப்புள்கொடியை வெட்ட உங்கள் டாக்டரிடம் பரிந்துரையுங்கள்.

♥அதை விடுத்து பாதுகாத்து வைக்கிறோம் ஸ்ரெம்செல்லை என்பதெல்லாம் கண்துடைப்பு வேலை.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.