பனை அபிவிருத்தி சபையினால் பனம்பழங்கள் , விதைகள் கொள்வனவு : தொடர்புகொள்ளுங்கள்
பனை அபிவிருத்தி சபையினால் பனம்பழங்கள் மற்றும் பனம் விதைகள் கொள்வனவு செய்யப்படுகின்றன.
தரமான பனம்பழம் 5 ரூபாவாகவும், பனம் விதை ஒரு ரூபாவாகவும் கொள்வனவு செய்யப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பனை அபி விருத்திச்சபையின் விரிவாக்கல் திட்ட முகாமையாளர் – கா.கோபாலகிருஸ்ணன் தெரிவித்ததாவது:
வலந்தலைச்சந்தி காரைநகரில் அமைந்துள்ள பனம்சார் பல்தொகுப்பு நிலையத்திலும், சிங்கை நகர்புலோலியில் அமைந்துள்ள பனைசார் உற்பத்தி நிலையத்திலும் இவை கொள்வனவு செய்யப்படும்.
மக்கள் 07732243022 மற்றும் 0776907125 ஆகிய கைபேசி எண் ஊடாகத் தொடர்புகொண்டு பனம்பழம், பனம்விதைகளை வழங்கமுடியும்.

No comments