கிளிநொச்சியில் கடன்சுமை என்று பூசாரியிடம் சென்றவர் இரத்தம் கக்கி பலி!
கடன்சுமை என ஆவலயப் பூசகரிடம் சென்ற ஒருவர் பூசாரி கொடுத்த மருந்தை அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கிளிநொச்சி ஜெயந்திநகர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி ஜெயந்திநகர் பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய ஆதித்தகுமார் என்பரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த குடும்பஸ்தர் கடன்சுமை காரணமாக ஆலயப் பூசகரிடம் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆலய பூசகர் செய்வினை அகற்றுவதாக கூறி மருந்து ஒன்றை இருநாட்கள் உட்கொள்ளுமாறு கொடுத்துள்ளார்.
அதனையும் உரியவர் அவ்வாறே மேற்கொண்டுள்ளார்.
அதன் போது வாந்தி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வாந்தி ஏற்படுவதை பூசகருக்கு தெரிவித்த நிiயில் அது செய்வினை அகலுவற்கு என பூசாரி தெரிவித்துள்ளார்.
எனினும் இறுதியில் வாந்தி குருதியாக வெளியேற ஆரம்பித்த போது ஏற்பட்ட உடல்சோர்வை அடுத்து குறித்த நபரின் உறவினர் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இவ்வாறு குருதி ஏற்படுவதற்கான காரணத்தை வைத்தியர் கண்டறிவதற்கு முன்பே நோயாளி மிகவும் ஆபத்தான கட்டத்தை நெருங்கிய போது காது மற்றும் மூக்குப் பகுதிகளாலும் குருதி வெளியேறியுள்ளது.
இதன்போது நிகழ்ந்ததை உறவுகள் வைத்தியர்களுக்கு தெரியப்படுத்தியதும் வைத்தியர்கள் துரிதமாக செயற்பட்டடுள்ளனர்.
இருப்பினும் வர்த்தகர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments