ரயில் பயணத்தில் தமிழ் பெண்ணிடம் கண்ட அன்பு! பெருமை கொள்ளும் சிங்களவர்கள்

ரயில் பயணத்தில் தமிழ் பெண்ணிடம் கண்ட அன்பு! பெருமை கொள்ளும் சிங்களவர்கள்

ரயில் பயணத்தின் போது தமிழ் பெண்ணொருவரிடம் கண்ட அன்பினால் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
உடரட்ட மெனிக்கே ரயிலில் தமிழ் பெண் ஒருவர் செயற்பட்ட முறையினை தென்னிலங்கை சிங்கள சமூகத்தவர்கள் பாராட்டியுள்ளனர்.
கொழும்பை சேர்ந்த ஒருவர் உடரட்ட மெனிக்கே ரயிலில் தனது பிள்ளையுடன் பயணித்துள்ளார்.
கூட்டம் அதிகமாக இருந்த ரயிலில் அந்த தமிழ் பெண் கொழும்பில் இருந்து சென்றவரின் பிள்ளையை தனது மடியில் வைத்து பயணம் செய்வதற்கு இணங்கியுள்ளார்.
மடியில் பிள்ளையை வைத்து கொண்ட அந்த பெண், பிள்ளையின் மீது காற்றுப் படாதவாறு கைகளை அணைத்து கொண்டு பயணித்துள்ளார்.
இதனை கொழும்பில் இருந்து சென்ற சிங்களவர் தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
“உடரட்ட மெனிக்கே ரயிலில் இன்று காலை தமிழ் தாய் ஒருவர் எனது பிள்ளையை தனது கரங்களில் பெற்றுக் கொண்டார்” என புகைப்படங்களுடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
பதிவை பார்த்த சிங்கள நண்பர்கள் பலர், தமிழ் பெண்ணுக்கு நன்றியை தெரிவித்துள்ளதுடன், தமிழர்கள் மிகவும் அன்பானவர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நாட்டு அரசியல்வாதிகளினாலேயே சிங்களம் மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் இனவாதத்தை ஏற்படுத்துவதாக பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை மேலும் அழகாக பதிவிட்டு பலருக்கு இதனை சுட்டிக்காட்டியிருக்கலாம் என பெரும்பாலான சிங்கள நண்பர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.