யாழ் போதனா வைத்தியசாலையில் அலட்சியத்தால் மரணித்த சிசு


அமலஸ் ஜெயதீபா கூழாவடி ஆனைக்கோட்டை என்பவர்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இழைக்கப்பட்ட அனீதியை இங்கு நான் குறிப்பிடுகின்றேன் பல கனவுகளேடு சுமந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை காலனிடம் காவுகொடுத்துவிட்டு ஒற்றைக் குழந்தையோடு வீட்டுக்கு சென்றுள்ளார் ஜெயதீபா.
பல சிரமங்களின் மத்தியில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் உருவான குழந்தை தொடர்பாக பல கனவுகளோடு இருற்த ஜெயதீபா பரிசோதனைக்காக வைத்தியர் ஸ்ரீதரன் என்பவரின் கம்சியா கிளினிக்குக்கு சென்றுள்ளார் அங்கு தொடர்சியான மருத்துவ பரிசோதனையில் மூன்றாம் மாதம் எடுக்கப்பட்ட ஸ்கான் பரிசோதனையில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தை என்று வைத்தியரால் சொல்லப்பட்ட போது அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது தெடர்ந்து ஒன்பது மாதங்களும் மருத்துவ பரிசோதனைக்காக சென்றார்கள் குழந்தைகளுக்கோ தாய்கோ பரிசோதனைகளின் போது எந்த ஒரு பிரச்சினையும் இல்லை மிக ஆரோக்கியமாகவே இருப்பதாக வைத்தியர் ஸ்ரீதரன் கூறியுள்ளார் அத்துடன் தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்கலாம் என்று ஆலோசனை வழற்கியுள்ளார். ஆனால் அமலஸ் ஜெயதீபா இதற்கு உடன்படவில்லை அதற்கு காரணம் யாழ்பாணத்தில் காணப்படும் தனியார் மருத்துவமனையின் தரம் தொடர்பான கவலையே.
அவர்கள் எதிர்பாத்து காத்திருந்த நேரமும் வந்தது 18.09.2017 இரவு 10 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது வீட்டில் பன்னீர்குடம் உடைந்த நிலையில் இரவு 10.30 மணிக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் 21ம் இலக்க பிரசவவிடுதியில் அனுமதிக்கப்பட்டார் உடனேயே பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஜெயதீபா அனாலும் அவருக்கு பிரசவம் நிகளவில்லை தொடர்ச்சியாக பிரசவ வேதனையோடு காத்திருந்தார் ஆனாலும் மேலதிக சிகிச்சை எதுவும் வழங்கப்படாது தொடர்ச்சியாக 21 மணித்தியாலங்கள் காக்கவைக்கப்பட்டார் அதன் பின்னரும் ஏதும் செய்யாத விடுதி வைத்தியரிடம் என்னால் ஏலாமல் இருக்கின்றது எனக்கு சத்திர சிகிச்சை செய்து குழந்தையை பிரசவியுங்கள் என்று இரந்த கேட்டுக் கொண்டதன் பின்னர் தான் 19.09.2017 இரவு 7.30 மணிக்குத்தான் சீசர் செய்யப்பட்டது.
பிறந்த குழந்தையில் ஒன்று மூச்சு விடுவதற்கு சிரமப் படுவதாக கூறி பேபி றுமில் விசேட கவனிப்பில் வைத்திருந்தார்கள் ஆனாலும் குழந்தை 26.09.2017 காலை 10.30 மணிக்கு அக் குழந்தை இறந்துவிட்டது ஆரோக்கியமாக பிறந்த குழந்தை திடீரென இறந்ததற்கு சரியான காரணம் வைத்தியர்களால் சொல்லப்படவில்லை.
எனது விசாரணையிலும் பிணப் பரிசோதனை அறிக்கையின் படியும் குழந்தைக்கு நோய் தொற்று ஏற்பட்டு இறந்து போனதை உறுதிப்படுத்த முடிந்தது. இதில் எனது கேள்வி என்னவென்றால்
1. பன்னீர்குடம் உடைந்து எவ்வளவு நேரத்தித்குள் பிரசவம் நிகழவேண்டும் சுகப் பிரசவத்திற்கு எவ்வளவு நேரம் காத்து இருக்கலாம்?
2. பிரசவம் காலதாமதம் ஆனதால் தான் ஒரு குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதா? 
3. நோய் தொற்று ஏற்படும் அளவிற்கு பேபிறுமை வைத்திருந்தது சரியா?
4. எந்தவிதமான நோய் தொற்று என்று கண்டுபிடித்து சிகிச்சையளிக்காமல் போனது ஏன்?
5. எதிர்காலத்தி இந்த பேபிறுமால் எத்தனை குழந்தைகளின் உயிரை காவுகொள்ளப்போகின்றது
6. ஒரு வைத்திய நிபுணர் தனியார் மருத்துவமனையித்தான் நான் பிரசவம் பார்ப்பேன் 
போதனா வைத்தியசாலையில் பிரசவம் பார்க்க மாட்டேன் என்று கூறுவதற்கு அதிகாரம் உள்ளதா?
7. பொதுமக்களாகிய நீங்கள் எப்போது முழித்துக்கொள்ள போகின்றீர்கள்?
நன்றி முகப்பு புத்தகம் : வி.எம். உதயசிறி
தனியார் வைத்தியசாலையில் தான் பிரசவம் பார்ப்பேன் என்று கூறும் வைத்தியர்களை உடனடியாக சேவையில் இருந்து நீக்கி விட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்ப்பணிப்புள்ள வைத்தியர்களை இதற்கு நியமிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும்.
(யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்துக்குள் ஒரு தாயும் ஒரு சிசுவும் வைத்தியர்களின் கவனக் குறைவால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் யாழ் மக்களிடையே போதனா வைத்தியசாலை தொடர்பில் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது) 
நயினாதீவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவரும் சில நாட்களுக்கு முன் அநியாயமாக உயிரிழந்துள்ளார்.
என்ன செய்யப் போகிறார் வைத்தியசாலை பணிப்பாளர்? வழமை போல் பொறுப்பின்றி இருந்த வைத்தியர்களை காப்பாற்றப் போகின்றாரா?

No comments

Theme images by mammuth. Powered by Blogger.