யாழ் சிறைச்சாலைக்கு சண்லைற் சோப்பில் வைத்து கஞ்சா கொண்டுசென்ற குடும்ப பெண்

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சண்லைற் சோப்பில் வைத்து கஞ்சா கொண்டுசென்ற குடும்ப பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்தத பெண் இன்று யாழ்.சிறைச்சாலை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
யாழ்.சிறைச்சாலைக்கு தனது கணவரைப் பார்க்கச்சென்ற கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பரிசோதனை செய்தபோது கணவனுக்காக கொண்டுவந்த சண்லைற் சோப்பிற்குள் 2 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்தபெண் யாழ்.சிறைச்சாலை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த பெண்ணின் கணவன் கஞ்சா வழக்கிலேயே சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.