மாணவியின் கல்வி கட்டணத்தை செலுத்தி, அதிரடி காட்டிய விஜய் ரசிகர்கள் !

மருத்துவ இடம் கிடைக்காமல் நீட் தேர்விற்கு எதிராக தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் இளைய தளபதி விஜய் தனது இரங்கலை அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று தெரிவித்திருந்தார்.


அவர் அனிதா வீட்டிற்கு சென்று வந்த பின்னர் பிரபல சேனல் ஒன்று டிவிட்டரில் விஜயின் மக்கள் இயக்கம் சார்பாக மாணவி ஒருவருக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதாக கூறி ஏமாற்றியதால் ஒரு மாணவியின் எதிர்காலமே பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியது. இதற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது.
விஜய் ரசிகர்கள் ஒருசிலர் அந்த டிவீட்டில் நீங்கள் அந்த மாணவியின் தகவல்களை தந்தால் நாங்கள் அந்த மாணவியை படிக்க வைக்கிறோம் அந்த மாணவிக்கான முழு கல்விக்கான செலவுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என பதிலளித்திருந்தனர்.இந்நிலையில் அரியலூரில் வசிக்கும் மாணவி ரங்கீலா என்வருக்கு தான் மேற்படிப்பு படிக்க நிதியுதவி செய்வதாக மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் வாக்குறுதி அளித்தது தெரியவந்தது.
விஜய் ரசிகர்கள் சொன்னது போலவே அந்த மாணவியை தேடிப்பிடித்து மக்கள் இயக்கம் சார்பாக இன்று ரூபாய் 1.5 இலட்சத்தை அளித்துள்ளனர்.
மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் புகைப்படத்துடன் கூடிய ஆதாரத்தினை தற்போது சமூகவலைத்தங்களில் பதிவேற்றியுள்ளனர்.
அதனை விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர்.ஏற்கனவே அனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியபோது விஜய்க்கு பாராட்டுகள் பலதரப்பிலிருந்தும் குவிந்தவண்ணம் இருந்தது.
தற்போது விஜயின் ரசிகர்களுக்கும்,மக்கள் இயக்கத்தை சார்ந்தவர்களுக்கும் வாழ்த்துகள் குவிகின்றது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.