FACEBOOK FAKE ID காதல் உண்மை அறிந்து மனமுடைந்துபோன இளைஞர் : யாழ்ப்பாணத்தில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் தற்பொழுது முகநூலை தவறாக பயன்படுத்தி வேடிக்கைகாணும் கும்பல் உருவாகிவிட்டது
யாழ்ப்பாணத்தினை வதிவிடமாக கொண்ட ஒரு இளைஞனை இன்னுமொரு இளைஞன் முகநூல்மூலம் FAKE ID ஒன்றை உருவாக்கி அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பதிந்து ஒரு பெண்போலவே குறும்செய்திகளை அனுப்பி அந்த முகநூல் மூலம் காதல் வலையில் விழவைத்து வேடிக்கைகாண முயற்சித்த சம்பவம் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் முகநூலில் நண்பர்வட்டத்தில் இணைந்து நண்பி போல் குறும்செய்திகளை அனுப்பி யாழ்ப்பாணத்து இளைஞன் ஒருவனை ஏமாற்றிவந்துள்ளார் மற்றுமோர் இளைஞர். ஆனால் அதனை அறியாத இந்த நபர் தன்னை உண்மையாகவே ஒருத்தி காதல் செய்கிறாள் என எண்ணி அவரும் இவ்வளவுகாலம் ஏமாந்துவந்துள்ளார்.
பின்னர் அந்த முகநூலினை ஆராய்ந்தபொழுது அதில் மறைக்கப்படாத தொலைபேசி இலக்கத்தை கண்டு அதனை வைபர் மூலம் பார்வையிடுள்ளார். அப்பொழுதே அவர் அறிந்துகொண்டார் இது ஒரு ஆண் என்பதை. குறித்த இலக்கத்தை வைபர் மூலம் தொடர்புகொண்டபொழுது குறித்த நபர் வெளிநாட்டில் தனியாக வசித்துவருவதனையும் அவர் தனது சொந்த உரை சேர்ந்தவர் என்பதனையும் அறிந்து அதிர்ச்சியில் மனமுடைந்துபோனார் இந்த இளைஞர்
இளைஞர்களே எச்சரிக்கை .....
இளைஞர்களே எச்சரிக்கை .....

No comments