இன்று வேலைக்கு செல்லாதவர்களுக்கு வேலை இல்லை : மிச்சக்தி அமைச்சு வைத்த ஆப்பு
இன்று காலை பணிக்கு திரும்பியிராதவர்கள் பணிவிலகியவராக கருதப்படுவர் – மிச்சக்தி அமைச்சு அதிரடி
அத்தியவசிய மின்சார சேவையை வழங்குவதற்கு தேவையான இலங்கை மின்சார சபையில் சாதாரண அடிப்படை மற்றும் பயிற்சி அடிப்படையில் இருக்கும் அனைத்து ஊழியர்களும் இன்று காலை கட்டாயம் பணிக்கு சென்றிருக்க வேண்டும் என்று மின்சரம் மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு கூறியுள்ளது. அவ்வாறு பணிக்கு திரும்பியிராத சாதாரண அடிப்படை மற்றும் பயிற்சி அடிப்படையில் இருக்கும் அனைவரும் பணியில் இருந்து விலகியதாக கருதப்படும் என்று மின்சரம் மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறிப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் என்று அந்த சங்கம் கூறியுள்ளது. துறை சார்ந்த அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

No comments