13 வயது சிறுமிமீது பாலியல் தொந்தரவு : சமுர்த்தி உத்தியோகஸ்தர் கைது : மண்டைதீவு
மண்டைதீவு பகுதியில் 13வயது சிறுமியினை பாலியல் தொந்தரவிற்கு உட்படுத்திய வேலணை 5ம் வட்டாரப்பகுதியினை சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தரை நேற்று (14) கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சமூர்த்தி உத்தியோகத்தர் மண்டைதீவின் 7ம் வட்டாரப்பகுதிக்கு பொறுப்பானவர் என பொலிஸார் கூறினர்.
சமூர்த்தி வங்கியூடாக நடாத்தப்பட்டு வரும் பேச்சுபோட்டி ஒன்றிற்காக ஒத்திகை பார்பதற்கு சென்ற சமயம் குறித்த சிறுமியினை உத்தியோகத்தர் தொந்தரவு செய்து தனது கைபேசியில் படம் பிடித்துள்ளார். படம் பிடித்தவர் இதனை யாரிடமும் கூறவேண்டாம் என அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சிறுமி வீட்டுக்கு சென்ற சமயம் உத்தியோகத்தர் பின்தொடர்ந்து வந்ததனை அவதானித்த சிறுமி பய உணர்வினால் சத்தம் போட்டுள்ளார்.
இதன் போது சமுர்த்தி உத்தியோகத்தர் தனது கைபேசியினை கைவிட்டு தப்பி சென்றுள்ளார். கைபேசியினை சோதனை செய்து ஆராய்ந்த போது அது மண்டைதீவு 7ம் வட்டாரத்திற்கு பொறுப்பான சமுர்த்தி உத்தியோக்தருடையது என அறியப்பட்டதுடன் சிறுமியினை எடுத்த புகைப்படங்களும் கைபேசியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் பிரதேச மக்கள் ஊர்காவற்துறை பொலிஸின் மண்டைதீவு பொலிஸ் காவலரணுக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இதன் அடிப்படையில் வேலணை பிரதேச செயலர் சோதிநாதன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய மண்டைதீவுக்கு 7ம் வட்டாரப்பகுதிக்குரிய கிராமசேவையாளர் ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டதாக ஊhகாவற்துறை பொலிஸார் கூறினர். அத்துடன் கைபெற்றப்பட்ட கைபேசியும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கைதான சந்தேக நபரான சமுர்த்தி உத்தியோகத்தரை ஊர்காவற்துறை நீதிமன்றில் நாளையதினம்(15) முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments