H I V என்றால் என்ன? எப்படி பரவுகின்றது? தொற்றுதலை எவ்வாறு தடுப்பது? அறிவியல் வளர்ந்துவிட்டது உண்மையை அறிந்து விழித்துக்கொள்ளுங்கள்
எச்.ஐ.வீ என்றால் என்ன?
எச்.ஐ.வீ என்பது மனித நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் வைரஸ் ஆகும்.
எச்.ஐ.வீ உடம்பின் நோயெதிர்ப்பு தொகுதியின் வெங்குருதி கலன்களை - குறிப்பாக CD4 கலன்களை தாக்குகின்றது. CD4 கலன்கள் நோய்களை எதிர்த்து போராடும் ஒரு முக்கிய வகையான வெண்குருதி கலன்கள் ஆகும். இவ்வைரஸ், குணபடுத்தபடாமல் விடும் போது, CD4 கலன்களை அழிக்கின்றன. இது, எச்.ஐ.வீ உடன் வாழும் நபரை நேர்ச்சி தொற்று நோய்களுக்கு எளிதான இலக்கு ஆக்குகிறது.
அண்மையில் ஐக்கிய நாடுகளின் எயிட்ஸ் அமைச்சினால் சேகரிக்கப்பட்ட தரவுகளுக்கு அடிப்படையில், சர்வதேச ரீதியில் 36.9 மில்லியன் பேர் எச்.ஐ.வீ உடன் வாழுகின்றனர். 2015ஆம் ஆண்டின் இறுதி கட்டத்தில், முன்பு தேசிய எஸ்.டி.டீ/எயிட்ஸ் கட்டுபாடு திட்டம் (NSACP) என அழைக்கப்பட்ட இலங்கையின் தேசிய எச்.ஐ.வீ திட்டம், எம் நாட்டில் எச்.ஐ.வீ உடன் வாழும் வயது வந்தோர் 4100 பேர் உள்ளனர் என தெரிவித்தது. 2016ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 2630 பேர் எச்.ஐ.வீ உடன் வாழுகின்றனர் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டில், 249 புதிய எச்.ஐ.வீ சம்பவங்கள் தரவு செய்யப்பட்டன. 1987ஆம் ஆண்டில், இலங்கையில் முதன் முதலில் எச்.ஐ.வீ தொற்றப்பட்டதன் பின், இப்பொழுது தான் இந்த மாதிரியான ஒரு அதிக அளவிலான சம்பவங்கள் திரும்பவும் நடைபெற்று உள்ளன. இதற்கு அமைய, ஒவ்வொரு மாதமும், 21 பேர் எச்.ஐ.வீ தொற்றுதலுக்கு உள்ளாகின்றனர். இருப்பினும், இந்த தரவுகள் எச்.ஐ.வீ உள்ள அனைவரையும் உள்ளடக்குவது இல்லை. பலர் தமது நிலைமையை பற்றி அறிந்திருக்காமல் இருக்கலாம். மேலும், களங்கம் மற்றும் பாரபட்சத்திற்கு பயந்து பரிசோதனைகளில் ஈடுபடாமல் போகலாம். - NSACP வருட அறிக்கை 2016
1984ஆம் ஆண்டு, எயிட்ஸை உருவாக்கும் வைரஸாக எச்.ஐ.வீ கண்டுபிடிக்கபட்டு, 1986ஆம் ஆண்டு எச்.ஐ.வீ என பெயரிடப்பட்டது. முன்பு இந்நோய் ஒரு மரண தண்டனையாக கருதபட்டாலும், இன்று, 2016ஆம் ஆண்டில், இது நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தத்தை போல ஒரு சாதாரண நோயாகவே கருதப்படுகிறது. எச்.ஐ.வீ என்பது மரண தண்டனை இல்லை என்பதையும், இது கையாளக்கூடிய ஒரு நீண்டகால நிலைமை என்பதையும் மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். இன்று, சிகிச்சை மூலம், எச்.ஐ.வீ உள்ள ஒருவர் நீண்ட காலம் நலமாக வாழலாம்.
எச்.ஐ.வீ எப்படி பரவுகின்றது?
எச்.ஐ.வீயால் பாதிக்கபட்ட ஒருவரின் குருதி, தாய்பால், சுக்கிலம், யோனி திரவங்கள், குத சளி என்பன உங்கள் குருதியில் நுழைந்தால், நீங்கள் இந்நோயால் பாதிக்க பட முடியும். இவ்வாறு நடக்க, ஒரு வெட்டோ, புண்ணோ அல்லது குருதி ஓட்டத்திற்கு ஒரு வாயிலோ இருக்க வேண்டும். குத படலம், யோனி குழாயின் உட்பாகம், குத வாய் மற்றும் சிறுநீர் குழாய் என்பன மிகவும் மென்மையானவை என்பதால் இவை எளிதில் பாதிப்புக்கு உள்ளாகபடுகின்றன. இதன் காரணமாக இந்நோயை அதிக அளவில் பால்வழியே பரவுகிறது.
1987 - 2014 வரை இலங்கையில் பதிவாகபட்ட அனைத்து எச்.ஐ.வீ பதிவுகளிலும், 94.5% பதிவுகள் பாதுகாபற்ற உடலுறவின் காரணமாகவே உருவாகி உள்ளன என நம்பப்படுகிறது. 2015ஆம் ஆண்டு அறிக்கை செய்யப்பட்ட 86% பதிவுகளின் படி, பாதுகாப்பற்ற உடலுறவே இந்நோய் தொற்றுவதற்கு முக்கிய காரணி ஆகும். மேலும், இத்தகவல்கள், 3% தொற்றுகை தாயிடமிருந்து பிள்ளைக்கும், 1% உட்செலுத்தப்படும் போதைபொருள் பாவனை காரணமாகவும், எச்.ஐ.வீ பரவியது என அறிவித்தன.
"11% சம்பவங்களில் எச்.ஐ.வீ தொற்றியதற்கான காரணத்தை கண்டறிய தேவையான தகவல்கள் காணப்படவில்லை." - NSACP வருட அறிக்கை 2016
உமிழ்நீர் போன்ற உடற்திரவியங்களில் எச்.ஐ.வீ வைரஸ் இருப்பினும், அதில் உள்ள வைரஸ் அளவு போதாத காரணத்தினால், இவ்வழியின் மூலம் இந்நோய் தொற்றாது. குருதி, தாய்பால், சுக்கிலம், யோனி திரவங்கள், குத சளி ஆகிய ஐந்து வழிகளை தவிர இந்நோயை வேறு எந்த வழியிலும் பரவாது என்பதை மீண்டும் ஞாபகபடுத்துகிறோம்.
இருப்பினும், 2017ஆம் ஆண்டு IASஇனால் நடாத்தப்பட்ட ஆராய்ச்சிக்கு அமைய, செயல்திறனுள்ள மருந்துகளை பாவிப்போர், எச்.ஐ.வியை தொற்றுவிக்க முடியாது. 2017ஆம் ஆண்டு டெரன்ஸ் ஹிக்கின்ஸ் டிரஸ்ட் இன் #தொற்றுவிக்கமுடியாது என்னும் பிரச்சாரம் குறிப்பிட்டதாவது:
"செயல்திறனுள்ள மருந்துகளை பாவிப்போர், எச்.ஐ.வியை தொற்றுவிக்க முடியாது என விஞ்ஞான ஆதாரங்கள் கூறுகின்றன. இது, சிகிச்சை குருதியில் உள்ள எச்.ஐ.வியினை, மிக குறைந்த அளவுக்கு ஆக்குவதால், அது இன்னொருவருக்கு பரவ முடியாமல் போகிறது. இந்து பல காரணங்களினால் மிக முக்கியமாகிறது. முதலில், இதனால் புதிய எச்.ஐ.வீ தொற்றுகள் ஏற்படுவதை நிறுத்தி கொள்ளலாம்.
இரண்டாவதாக, இது களங்கத்தை இல்லாமல் செய்து , மக்களை சந்தோஷமாகவும், எந்தவித பயங்களும் இல்லாமல் உறவுகளில் ஈடுபடவும் உதவும்.இருப்பினும், பலர் எச்.ஐ.வீ பற்றி அறிந்து இருப்பது இல்லை. இந்த அறிவை அதிகரிக்க முன், செய்ய வேண்டிய வேலை நிறைய உள்ளது."
எச்.ஐ.வீ தொற்றுதலை எவ்வாறு தடுப்பது?
மக்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதன் மூலம் எச்.ஐ.வீ தொற்றுதலை தடுக்க முடியும்.
உடலுறவில் ஈடுபடாமல் இருப்பதன் மூலமோ, தன் துணையாளருக்கு விசுவாசமாக இருப்பதன் மூலமோ அல்லது ஆணுறைகளை பாவிப்பதன் மூலமோ மட்டும் இந்நோய் பரவுவதை தடுக்க முடியாது. இவ்வகையான தவிர்ப்பு முறைகள் மேலும் விபரமாகவும் விளக்கமாகவும் அறிவுறுத்தப்பட வேண்டும்.
இதனால் தான், சுய விருப்பத்துடன் பெறப்படும் ஆலோசனை மற்றும் பரிசோதனை மற்றும் அனைத்தடக்க பாலியில் மற்றும் உறவு கல்வி என்பன எச்.ஐ.வீ நோய் உடலுறவின் மூலம் பரவுவதை தடுப்பதற்கு அத்தியாவசியமாகும். இம்முறைகள் சரியான தகவல்களை அறியவும் ஒழுங்கான முடிவுகளை எடுக்கவும் உதவி செய்கின்றன.
உதாரணத்திற்கு, விருத்தசேதனம் எச்.ஐ.வீ நோயை தடுக்க உதவும். சிகிச்சை மூலம் தடுப்பு என்பது தொற்றுதலை குறைக்க பயன்படும் ஒரு நவீன வைத்திய சிகிச்சை முறை ஆகும். அண்டி- ரெட்ரோ வைரல் சிகிச்சை முறையை பின்பற்றுவதன் மூலம் ஒருவரின் எச்.ஐ.வீ வைரஸ் தொகையை குறைத்து இந்நோய் தொற்றுவதை தடுக்க முடியும். எச்.ஐ.வீ சிகிச்சை முறைகள் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு இந்நோய் கர்ப்பகாலத்திலோ, பிரசவத்தின் போதோ அல்லது பாலூட்டுவதன் மூலமோ தொற்றுவதை தடுக்க முடியும்.
எச்.ஐ.வீ சிகிச்சை, இந்நோயால் அதிகமாக பாதிக்கபடகூடிய நபர்களுக்கு, அதாவது எச்.ஐ.வீயால் பாதிக்கப்பட்ட ஒருவரை திருமணம் செய்த ஒருவர் அல்லது எச்.ஐ.வீ உள்ள பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள் போன்றோருக்கு, மிகவும் பயனுள்ளதாகும்.
ஆண்களுடன் உறவு கொள்ளும் ஆண்களுக்கு இடையேயும் போதைபொருள் பாவிப்போர் இடையேயும் அண்மையில் நடத்தபட்ட பரிசோதனைகளின் போது ப்ரீ-எச்போசர் ப்ரோபிலேக்சிஸ் எனும் சிகிச்சை முறை எச்.ஐ.வீ தொற்றுகையை தடுப்பதற்கு உதவி செய்கின்றது என கண்டுபிடிக்கப்பட்டது. எச்.ஐ.வீக்கு வெளிபடுத்தபட்டு இருக்க கூடியோரும் - எச்.ஐ.வீ ஊசிகளால் தவறுதலாக காயபட்ட வைத்தியர்கள் மற்றும் தாதிமார் போன்றோர் - ப்ரீ-எச்போசர் ப்ரோபிலேக்சிஸ் சிகிச்சை முறை மூலம் குணபடுத்தபடலாம்.

No comments