காத்தான்குடியில் போக்குவரத்து விதிகளை மீறிய 170 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
காத்தான்குடியில் போக்குவரத்து விதிகளை மீறிய 170 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் போக்குவரத்து விதி முறைகளை மீறிய 170 பேர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
ஹஜ் பெருநாள் தினமான நேற்று முந்தினம் மற்றும் நேற்று ஆகிய இரு தினங்களிலுமே மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்த 170 பேர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments