BIG BOSS வெற்றிபெறவேண்டியது கணேஷ் : விஜய் டிவியின் வழமையான சதி
Bigboss போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் ஆனால், அது கணேஷ் வெங்கட்ராம் தான். ஆனால், ஆரவ் வெற்றி பெற்றதற்கு பின்னணியில் விஜய் டிவியில் சதி இருக்கிறது, என்று சிலர் கூறி வருகிறார்கள். அப்படி என்ன சதி, என்று விசாரிக்கையில், எஞ்சியிருந்த நான்கு போட்டியாளர்களில் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் சினேகன் இருவரில் ஒருவர் தான் வெற்றி பெறுவார்கள், என்று தமிழகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க, மக்கள் எதிர்ப்பார்ப்பது நடக்க கூடாது என்ற முடிவுக்கு வந்த விஜய் டிவி ஆரவை வெற்றியாளராக தேர்வு செய்ததாகவும், முதலில் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்ற முடிவு இருந்த ஓவியாவை, ஆரவ் மற்றும் அவரது குடும்பத்தாரை சந்திக்க ஏற்பாடு செய்து தருகிறோம், என்பதை கூறியே விஜய் டிவி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததாம்.
ஓவியாவின் ஆதரவும் ஆரவுக்கே இருப்பதால், ஆரவை வெற்றி பெற்றவராக அறிவித்துவிடலாம் என்று முடிவு செய்த விஜய் டிவி, மக்கள் மீது சிலருக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி, பிறகு சற்றும் யாரும் எதிர்ப்பாரத விதத்தில் மற்றவருக்கு பிக் பாஸ் பட்டம் கொடுக்க வேண்டும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், விஜய் டிவி-யின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நடக்கும் சதி, பிக் பாஸிலும் நடந்தது ஒன்னும் ஆச்சரியமில்லை, என்று இந்த நிகழ்ச்சியை ரெகுலராக பார்த்து வந்தவர்கள் பலர் புலம்புகிறார்கள்.

No comments