உலகின் மிகச் சிறந்த உணவு தமிழரின் பாரம்பரிய உணவான பழைய சாதம்
நாகரீகம் வளர்ந்துவிட்டது ,நமது வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் நாம் செய்து விட்டோம் .வேட்டிக்கட்டியவர்கள் இன்று பேண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள் சேலைக்கட்டியவர்கள் சுடிதாருக்கு மாறிவிட்டார்கள் .இப்படி எத்தனையோ மாற்றங்கள் சொல்லிகொண்டேப்போகலாம் .
அந்த வகையில் நமது உணவு பழக்கவழக்கத்திலும் எவ்வளவோ மாறுதல்களை புகுத்திவிட்டோம் , பொதுவாக இன்றைய அவசர உலகத்தில் நாம் உணவு விஷயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதே கிடையாது இப்போதெல்லாம் உணவை ருசிக்ககூட நேரம் கிடையாது .பசிக்கும் கொஞ்சம் வயிற்றில் போட்டுக்கொண்டு அவரவர் வேலைகளுக்கு ஓடிகொண்டுருகிறார்கள். இன்னும் சில வீடுகளில் காலையில் பள்ளிச்செல்லும் குழந்தைகளுக்கு உணவை கொடுக்கும் தருணம் இருகிறதே , அப்பப்பா ... ஒரு உலக யுத்தமே நடத்தி முடிப்பார்கள் . இன்னும் சில இடங்களில் காலையிளையிலே எல்லோரும் வேலைக்கு அல்லது கல்லூரிகளுக்கு செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள் ,பொதுவாக அந்த மாதிரி வீடுகளில் காலையில் உணவு செய்யும் பழக்கமே இருக்காது .அவர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு மூலையில் ஆளுக்கு ஒரு கடையில் இருப்பதைச் சாப்பிட்டுவிட்டு அவரவர் வேலைகளுக்கு செல்லக்கூடிய துர்பாக்கிய நிலையினைப்பார்க்கலாம் . இப்படி தான் இந்த காலகட்டத்தில் பலர் உணவை மதிப்பு இல்லாத ஒன்றாக மாற்றிவிட்டார்கள் .அதானால் தான் என்னமோ நமக்கு வியாதிகள் கூட மிக சுலபத்தில் வந்து ஒட்டிக்கொள்கிறது .இப்போதெல்லாம் நல்ல சாப்பாட்டை சாப்பிட செலவு செய்ய விரும்பாத பல மனிதர்கள் தேவையில்லாதவற்றைச் சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைகளுக்கு பல ஆயிரங்களை அள்ளிக்கொட்டுகின்ற அவல நிலையினைய்தான் உருவாக்கிருகிறார்கள்.
கிராமப்புறங்களில் இப்போதும் நீங்கள் பார்க்கலாம் , வயல் வெளிகளில் வேலைசெய்யும் மக்கள் உண்ணக்கூடிய உணவு வகைகள் மிக சுலபத்தில் தயார்ச்செய்யக்கூடியவைகலாகத்தான் இருக்கும் .மேலும் அவைகள் சுவையானது சத்தானது நன்றாக ருசிக்ககூடியது .ஆனாலும் அவைகளை தினம் தினம் தொடர்ந்து அவர்கள் சாப்பிட்டு வந்தாலும் அவர்களுக்கு எந்தவித பாதிப்புகளோ இல்லை வியதிகளோ ஏற்ப்படுவதில்லை ,மருதுவமனைகளுக்கென்று எந்த வித செலவும் செய்வதில்லை .ஆனால்
காலையிலேயே பொங்கல் பூரி வடை என்று இப்படி வித விதமாக சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்லும் நாமோ மாலையில் நேராக செல்வது மருத்துவர் வீட்டுக்குத்தான் காரணம் சாப்பிட்டது செரிப்பதில்லை வயிறு கோளறு என்று எவ்வளவு தொல்லைகள் .
சரி அப்படி என்ன கிராமங்களில் கலையில் சாப்பிடுகிறார்கள் அட ஒன்னும் இல்லைங்க , கொஞ்சம் பழைய சோறு நாலு வெங்காயம் அவ்வளவுதான் .
அப்படி என்ன இதுக்கு சிறப்புன்னு கேட்குறிங்களா நிறைய இருக்குங்க , நானா கலையில எழுந்தவுடன் பல் விளக்காமல் வெறும் வயிற்றில் சூடா டீ , காபி னு
குடிக்கிறோம், இன்னும் சிலர் பெட் காபி, படுக்கையிலையே இருந்துக்கொண்டு எழுதேறிக்காம குடிப்பாங்க ஆனா அது எவ்வளவு கேடுதலுனு உங்களில் பலருக்கு தெரியாது, ஆனால் அதுதான் உண்மை .ஆனா காலையில எழுந்ததும்
முன் இரவில் பழைய சோற்றில் ஊத்தி வைத்த நீர் ஆகாரம் ஒரு சொம்பு குடிச்சிப்பாருங்க அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியா இருக்கும் . இது தாங்க நாம்ம முன்னோர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்கள் அதில் தாங்க ஆரோக்கியம் இருந்திச்சி
பழைய சாதத்தில் உள்ள சத்துக்கள் குறித்து அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் பழைய சாதம் சிறந்த உணவு என தெரியவந்துள்ளது.
பழைய சாதத்தில் விட்டமின் பி6, பி12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
இவற்றை உட்கொள்ளும் போது, அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், உடல் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதோடு, உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கின்றன.
இதனால் உடலில் அடிக்கடி ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
மேலும், தினமும் காலையில் பழைய சாதத்தினை சாப்பிட்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க விரும்பினால், பழைய சாதத்தினை காலை உணவாக உட்கொண்டு வாருங்கள்.
அதுமட்டுமின்றி எலும்பு சம்பந்தப்பட்ட மூட்டு வலி பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
பழைய சாதத்தில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
காலையில் பழைய சோற்றினை உட்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம். குறிப்பாக சோர்வு என்ற ஒன்றையே மறந்துவிடலாம்.
தற்போது பலருக்கும் உள்ள உயர் இரத்த அழுத்தத்தை பழைய சோறு கட்டுப்படுத்துமாம். எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், பழைய சோற்றினை காலை உணவாக எடுத்து வாருங்கள்.
இக்கால தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் அல்சர் பிரச்சனையை பழைய சோறு தடுக்குமாம். இதற்கு காரணம், அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான்.
எந்த அரிசியில் செய்யலாம்?
பழைய சோறு செய்வதற்கு சம்பா அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி தான் சிறந்தது. ஏனெனில் இந்த அரிசியில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளது
வாழக்கற்றுக்கொள்வோம் . சிலர் மத்தவங்க எதாவது நினைச்சிகுவாங்கலோனு கூட அவற்றை சாப்பிட கூச்சப்படுவாங்க ,ஆனா இதுல என்னங்க கூச்சம் நல்ல சாப்பாடு சாப்பிடனும்னா நாம மத்தவங்களப்பத்தி ஏன் கவலைப்படணும் சொல்லுங்க ...
ஆகவே , நாம் நலாமுடன் வாழவும் நமது சன்னதியனருக்கும் நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்கவும் இந்த மாதிரி சிலவற்றை முதலில் நீங்கள் பின்பற்றுங்கள் . இனிவரும் அடுத்த தலைமுறையினருக்கு இயற்கையோடு கலந்த வாழ்க்கை முறையினை கற்றுக்கொடுங்கள் . அதற்கு இந்த பழைய சோற்றை நான் உங்களுக்காக நினைவுப்படுதிருக்கிறேன்

No comments