பேஸ்புக்கில் மனைவின் புகைப்படத்திற்கு வரும் ஒவ்வொரு லைக்குக்கும் ஒவ்வொரு குத்து: கொடூர கணவன்!!

உருகுவே நாட்டின் சன்ஸின் மாகாணத்தில் உள்ள நெம்பி பகுதியைச் சேர்ந்தவர் அடோல்பினா.
 இவரது கணவர் கேலியானோ. மனைவியின் மீது அதிக சந்தேகம் கொண்டவர் கேலியானோ. இதனால், ஒரு விபரீதம் நடந்துள்ளது. ஆம், பேஸ்புக்கில் தனது மனைவியின் புகைப்படத்துக்கு வரும் ஒவ்வொரு லைக்குக்கும் அவரது முகத்தில் ஒவ்வொரு குத்து குத்தி சித்திரவதை செய்துள்ளார் கேலியானோ.
மனைவியின் மீது உள்ள சந்தேகத்தால் மனைவின் பேபுக் பக்கதை தனது கட்டுப்பாட்டில் கொண்டிவந்துள்ளார். பின்னர், மனைவின் புகைப்படத்தை தானே பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
 அதில், அவருடைய புகைப்படத்திற்கு வரும் லைக், கமெண்ட், ரியாக்ஷன் என அனைத்துக்கும் ஒவ்வொரு குத்துவிட்டு மனைவியை சித்திரவதை செய்துள்ளார். சித்திரவதையினால் மிக மோசமான நிலைக்கு அடோல்பினா சென்றுள்ளார். இதை பார்த்த கேலியானோவின் தந்தை பொருமை இழந்து போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர். அடோல்பினோவின் வாய் உடைந்து, அடையாளம் தெரியாதபடி முகம் வீங்கி உள்ளது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு முக ஒழுங்கமைப்பு சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது. கேலியானோவிற்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Theme images by mammuth. Powered by Blogger.