யாழ்ப்பாணத்தில் உள்ள ரவல்ஸ் ஊடாக போலிய விமான பயண சீட்டு ;1 இலட்சத்து 28 ஆயிரம் ரூபா பணம் மேசடி

யாழ்ப்பாணத்தில் உள்ள ரவல்ஸ் ஊடாக போலிய விமான பயண சீட்டு (ரிக்கட்) கொடுக்கப்பட்டு, இந்தியா சொல்லவிருந்த பயணி ஒருவரிடம் 1 இலட்சத்து 28 ஆயிரம் ரூபா பணம் மேசடி செய்யப்பட்டுள்ளது.
 இந்த மோசடி தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இந்தியாவிற்கு செல்வதற்கான 3 விமான பற்றுச் சீட்டுக்களை (ரிக்கட்) பெற்றுக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் யாழ். கோவில் வீதியில் இயங்கிவந்த ரவல்ஸ் ஒன்றின் உதவியை நாடியுள்ளார். விமான பற்றுச்சீட்டை வழங்குவதற்காக குறித்த ரவல்ஸ்சினால் முற்பணமாக 45 ஆயிரும் ரூபா கோரப்பட்டுள்ளது.
 இதன்படி குறித்த நபர் 45 ஆயிரும் ரூபாவுக்காக வங்கி காசோலை ஒன்றினை வழங்கியுள்ளார். கடந்த மாதம் குறித்த காசோலையூடாக அந்த ரவல்ஸ் உரிமையாளர் பணத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதன் பின்னர் மீண்டும் ரவல்ஸ் ஊடாக பணம் கோரப்பட்ட நிலையில், 82 ஆயிரம் ரூபாவுக்காக காசோலை வழங்கப்பட்டுள்ளது. குறித்த சாசோலையை வங்கி ஊடாக பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல் வேறு ஒருவரிடம் கொடுத்து, குறித்த ரவல்ஸ் உரிமையாளர் பணத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
 பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் இந்தியாவிற்கான விமான பயணத்திற்கான 3 போலி பற்றுச்சீட்டினை வழங்கியுள்ளார். குறித்த போலிப் பற்றுச்சீட்டினை கொண்டு சென்று இந்திய தூதரக அதிகாரிகளிடம் சென்ற போது அது போலி பற்றுச்சீட்டு என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பில் குறித்த ரவல்ஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அது போலி விமான சீட்டு என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் பணத்தினை மீள கையளிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
 இதனால் பாதிக்கப்பட்டவர் நேற்று யாழ். பொலிஸ் நிலையத்தில் சென்று குறித்த ரவல்ஸ் நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த ரவல்ஸ் உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Theme images by mammuth. Powered by Blogger.