இளநரை பிரச்சினையை மிக எளிதாக இயற்கை வழியில் எவ்வாறு நீக்கலாம்?

தலைமுடி உதிர்தல், பொடுகு, இளநரை என தலைமுடி பிரச்சினைகள் ஏராளம். கூந்தல் ஒரு வருடத்துக்கு 6 இன்ச் அளவுக்கு வளரும் தன்மையுடையது. அதற்குப் போதிய அளவிலான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்க வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது.
 அப்படி தலைமுடிக்கு ஊட்டமளித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு தான். அதிலும் இந்த இளநரை பிரச்சினையை மிக எளிதாக இயற்கை வழியில் எவ்வாறு நீக்கலாம்?
 நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம். நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.
 சீரகம், வெந்தயம், வால் மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.
Theme images by mammuth. Powered by Blogger.