இலங்கை போக்­கு­வ­ரத்­துச் சபைக்­குச் சொந்­த­மான பேருந்து மீது கல்­வீ­சித் தாக்­கு­தல் நடத்­திய குற்­றச்­சாட்­டில் 5 பேர் கைது


இலங்கை போக்­கு­வ­ரத்­துச் சபைக்­குச் சொந்­த­மான பேருந்து மீது கல்­வீ­சித் தாக்­கு­தல் நடத்­திய குற்­றச்­சாட்­டில் 5 பேரைக் கைது செய்­துள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கண்டி நோக்­கிப் பய­ணித்த பேருந்தின் மீது கன­க­ரா­யன் குளம் பகு­தி­யில் வைத்து நேற்­று­முன்­தி­னம் கல் வீச்­சுத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

 இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஐவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்கள் தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Theme images by mammuth. Powered by Blogger.