யாழைச் சேர்ந்தவரின் 45 பவுண் தங்கம் அரசுடமையானது ; கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கைது

அனுமதிப்பத்திரமின்றி சுமார் 45 பவுண் எடையுடைய 19 தங்கக்கட்டிகளை மலேசியாவிலிருந்து கடத்தி வந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம்கைது செய்யப்பட்டார்.
 அவர் குற்றத்தை ஏற்றுக் கொண்ட தன் அடிப்படையில் 10 ஆயிரம் ரூபாய் தண் டம் விதித்து நீர் கொழும்பு நீதிவான் உத்தரவிட்டார். அவ ரால் எடுத்துவரப் பட்ட 19 இலட்சத்து 56 ஆயிரத்து 560 ரூபாய் பெறுமதி யான 355 கிராம் எடையுடைய தங்கத்தை அரசுடமையாக்குமாறும் நீதிவான் உத்தரவிட் டார் என சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
Theme images by mammuth. Powered by Blogger.