யாழ். போதனா வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய மகப்பேற்று கட்டிடத்தொகுதி அமைப்பட வேண்டும்


மேலும், யாழ் போதனா வைத்தியசாலைக்கு விபத்து சிகிச்சை பிரிவுக்கென 600 மில்லியன் ரூபாவும், நோயாளர் விடுதித் தொகுதி அமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபாவும், பாரிசவாத பிரிவுக்கு 700 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டு அதற்கானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிய வருகின்றன. 
இப்பணிகளைத் துரித கதியில் முன்னெடுத்து அத்துறைகளை விரைந்து இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை வேண்டும். அதே நேரம், குறைந்தது 300 கட்டில்களைக்; கொண்டதாகவும் சத்திரசிகிச்சை தொகுதி மற்றும் மகப்பேற்று அறை உள்ளடங்களாகவும் ஒரு மகப்பேற்று கட்டிடத்தொகுதி அமைப்பதற்கான தேவை இருக்கின்றது. 
இதற்கென சுமார் 2000 மில்லியன் ரூபா செலவிட நேரிடும் என்றும் தெரிய வருகின்றது.
Theme images by mammuth. Powered by Blogger.