மீனவர்களுக்கு சிகப்பு எச்சரிக்கை! : கடலுக்கு செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உள்ள வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். எனவும் டிசம்பர் 7-ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில் இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா, வடதமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இலங்கையில் கடற் பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய கால நிலை நிலவுமெனவும் மீனவர்களை எதிர்வரும் 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்வதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.