உணர்வுள்ள செயற்கை மனித உடலை உருவாக்கி சாதனை ;அமெரிக்காவின் சின்டோவர் ஆய்வகம்

அமெரிக்காவின் சின்டோவர் ஆய்வகம் மருத்துவ மாணவர்களின் உடற்கூறு பரிசோதனைக்குத் தேவையான உணர்வுள்ள செயற்கை மனித உடலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

மருத்துவ மாணவர்கள் தங்களது உடற்கூறியல் ஆய்வுக்கு மனிதர்களின் சடலத்தை ஆய்வு செய்வதுண்டு.

பிணவாடை பிடிக்காத பல மாணவர்களுக்கு அலர்ஜி ஏற்படுவதுமுண்டு.

இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது சின்டோவர் ஆய்வகம் தயாரித்துள்ள செயற்கை உடல் மற்றும் செயற்கை உறுப்புகள்.

அச்சு அசலாக மனிதனைப் போலவே இரத்தம் சிந்தும், மூச்சு விடும் தன்மையுள்ள இந்த செயற்கை உறுப்புகளை அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சின்டோவர் ஆய்வகம் தயாரித்துள்ளது.

முன்பு ரப்பர் மற்றும் சிலிகான் அல்லது பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்டு வந்த இந்த செயற்கை உறுப்புகள் தற்போது உயிருள்ள திசுக்களுடன் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

முன்பு தயாரிக்கப்பட்ட உடல் தசைகள் நெகிழும் தன்மை மற்றும் ஈரப்பசை அற்றதாக இருந்த நிலையில், தற்போது சின்டோவர் நெகிழும் தன்மையுடன் ஈரப்பசையுடன் கூடிய செயற்கை உறுப்புகளைத் தயாரித்துள்ளது.

இது மருத்துவ மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Theme images by mammuth. Powered by Blogger.