பெட்ரோல், டீசலுக்குப் பதில் பியரைப் பயன்படுத்தினாலும் ஓடும் கார்

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதில் கார்களுக்கு பியரைப் பயன்படுத்தும் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் மதுபானங்களை வைத்து விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக புதிய எரிபொருளைக் கண்டுபிடிக்கும் பணியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்.

மதுவில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்றினால் அதை எரிபொருளாக பயன்படுத்த முடியும். எனவே, மது வகைகளில் நிறைய சோதனைகள் நடத்தி பிரிக்கப்பட்டது. ஆனால், அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.

மது வகையில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்ற முடியவில்லை. அப்படி மாற்றினாலும் அது வாகனத்திற்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

எனவே, பியரில் இச்சோதனையை செய்தனர். அது வெற்றிகரமாக முடிந்துள்ளது.

அதில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் வாகனத்தை சரியாக இயக்கியது. அதிக மைலேஜும் கொடுத்தது.

எனவே பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பியர் மாறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், எத்தனாலை, பியூட்டனலாக மாற்றும் இந்த வினை செயல் அதிகக்காலம் எடுத்துக்கொள்வதால், தற்போது இந்த கண்டுபிடிப்பை பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த சிக்கலும் சரி செய்யப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Theme images by mammuth. Powered by Blogger.