சிவனொளிபாதமலைக்கு கஞ்சா கொண்டு சென்ற நால்வர் கைது

சிவனொளிபாதமலைக்கு கஞ்சா கொண்டு சென்ற நால்வரை ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் நோட்டன், தியகல சந்தியின் பொலிஸ் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 750 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
 புசல்லாவையிலிருந்து சிவனொளிபாதமலைக்கு வான் ஒன்றில் சென்ற 22 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட நால்லவரையும் இன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Theme images by mammuth. Powered by Blogger.