கபொத சாதாரண தர பரீட்சை மீட்டல் வகுப்புக்கள் அனைத்தும் நாளை (5) நள்ளிரவு முதல் தடை

கபொத சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையினால் இதற்கு எதுவித தடைகளை ஏற்படுத்தவில்லை என்றும் பரீட்சார்த்திகள் அனைவருக்கும் பரீட்சை அனுமதி பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
 பரீட்சை அனுமதி பத்திரங்கள் சேதமடைந்திருந்தால் புதிய அனுமதி அட்டைகள் வழங்கப்படும். நாளை (5) நள்ளிரவு முதல் மீட்டல் வகுப்புக்கள் அனைத்தும் தடை செய்யப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Theme images by mammuth. Powered by Blogger.