கனரக வாகனத்தால் மோதுண்டு இளம் கன்று உட்பட மூன்று மாடுகள் பலி

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில்   கனரக வாகனத்தால் மோதுண்டு இளம் கன்று உட்பட மூன்று மாடுகள் உயிரிழந்துள்ளன.
 ஆரையம்பதி பிரதேச சபைக்கும், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலைக்கும் முன்பாக உள்ள பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஆரையம்பதி பிரதேச சபைக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கட்டாக்காலி கால் நடைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டன.
 எனினும், அதிகாரிகளினதும், கால்நடைகளின் உரிமையாளர்களினதும் அசமந்த போக்கே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றிவரும் கால் நடைகள் இவ்வாறு உயிரிழப்பதற்கு காரணமாக அமைகின்றது என்பதும் குறிப்பிடத்ததக்கது.
Theme images by mammuth. Powered by Blogger.