இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டின் பல பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதனிடையே தெற்கு அந்தமான் தீவிற்கு ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் நாளை முதல் நாட்டின் ஊடாக மற்றும்நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் கூடும் எனவும் விசேடமாக வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு கடல் பகுதிகளில் இந்த நிலை பொதுவாக காணப்படும் என அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
Theme images by mammuth. Powered by Blogger.